ராபர்ட் மீது கடும் கோபத்தில் ரக்ஷிதாவின் கணவர்! ரெட் கார்டு கொடுக்கப்படுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதாவை துரத்தி துரத்தி ராபர்ட் மாஸ்டர் செய்யும் வேலைகள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது.
ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா
பிரபல நடன இயக்குனராக ராபர்ட் மற்றும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ரக்ஷிதா இருவருமே பிரபலமானவர்கள் தான்.
நடிப்பில் மட்டுமின்றி எதையும் எதிர்கொள்ளும் தைரியமான பெண் என்றெல்லாம் ரக்ஷிதாவை புகழ்வார்கள் அவரது ரசிகர்கள்.
இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்ததும் நிச்சயம் இறுதிவரை செல்வார் என்றே கூறப்படுகிறது.
ஆனால் முதல் வாரத்திலேயே ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா மேல் பாசம் காட்டும் செயல்கள் தொடர்ந்தாலும் சில நேரங்களில் எரிச்சலூட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை அழைத்து அறிவுரை கூறினாலும் அவர் திருந்தியபாடில்லை என்றே கமெண்டுகள் பதிவிடப்படுகிறது.
கடும் கோபத்தில் தினேஷ்
ரக்ஷிதாவின் கணவரான தினேஷ், இருவரும் பிரிந்து இருந்தாலும் இது நிரந்தரமானது அல்ல, விரைவில் ஒன்று சேர்வோம் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ரக்ஷிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போதுகூட, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரின் ஒரு சில செயல்களால் தினேஷ் மற்றும் அவரது குடும்பம் கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
இப்படியே தொடர்ந்தால் ராபர்ட் மாஸ்டருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டலாம் என்றே தகவல்கள் கசிந்துள்ளன.
What kind of NON SENSE this Robert master is doing here
— Raja (@whyrajawhy) November 8, 2022
Even after Rachitha calling him as Anna he is asking her to kiss his hands.
WHAAAAT THE ACTUAL FREAK is this 🤮🤮🤮@ikamalhaasan saar Can you give him a stern warning plz 🙏#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/z4P670TrWI