நடிகை ரக்சிதாவிற்கு இரண்டாவது திருமணமா? முன்னாள் கணவர் தினேஷ் கொடுத்த அதிர்ச்சி
பிக்பாஸ் பிரபலமான ரக்சிதா தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் முறையாக விவாகரத்துப் பெறப்போவதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் ரக்சிதா
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி இன்னும் பிரபலமானார்.
விவாரத்துக்கு தயார்
இந்நிலையில் தற்போது ரக்சிதா இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரக்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கணவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்து வாழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று சீரியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
இந்தப் பக்கமும் ரக்சிதாவின் கணவர் தினேஷ் விவாகரத்து செய்வதற்காக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.