பிக்பாஸ் வீட்டில் திரட்டிய பணத்தில் தான் கார் வாங்கினாரா ரக்சிதா! இந்த காரின் பெறுமதி தெரியுமா?
பிக்பாஸ் ரக்சிதாக புதிய கார் வாங்கி புதுவருடத்தை ஆரம்பித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வாய்ப்புக்கான முயற்சி
நடிப்பில் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி இறுதியாக சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.
மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியலில் சின்னத்திரைக்கு என்றி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் ரட்சிதாவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார்.
புதிய கார் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 ன் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். இவரின் செயற்பாடில் மாறுதல் காணப்படாததால் 13 வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரக்சிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் நேற்றைய தினம் தமிழர்களின் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற கார் வாங்கி புது வருடத்தை ஆரம்பித்துள்ளார்.
இவரின் காரை பார்த்த பிரபலங்கள் இது பல இலட்சம் ரூபாய் வருமே எப்படி வாங்கினார் என கேள்வியெழுப்பி வருகிறார்கள். மேலும் பிக்பாஸ் பணத்தில் தான் வாங்கியிருப்பாரோ என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.