நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு...ரக்சிதாவின் இறுதி முடிவு: இனிமேலும் கணவருடன் சேர வாய்ப்பு இல்லை!
பிக்பாஸ் ரக்சிதா குழந்தைகள் தொடர்பில் கோர்ட் வழங்கிய தீர்ப்பை பகிர்ந்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் ரக்சிதா
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருந்தார். அந்த தருணத்திலும் தினேஷ் ரக்சிதாவிற்கு ஆதரவாகத் தான் இருந்தார்.
வெளியில் இருந்து ரக்சிதாவிற்கு பெரும் ஆதரவைக் கொடுத்திருந்தார். அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார்.
image: indiaglitz
ரக்சிதாவின் வைரல் பதிவு
இந்நிலையில் ரக்சிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அதில் மும்பை நீதிமன்றம் பெண்கள் பற்றி தீர்ப்பொன்றை வெளியிட்டிருந்தது, அந்த தீர்ப்பானது தனியாக வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.
image: behindtalkies
இந்தப் பதிவை பகிர்ந்த ரக்சிதா அதில் இது போதும் இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதிவிட்டிருந்தார். பிக்பாஸ் ரக்சிதாவிற்கு குழந்தை பற்றி பெரிய ஏக்கம் ஒன்று இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதனால் கணவர் தினேஷ் உடன் இணைந்து வாழ்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில் ரக்சிதா இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார்.