துருக்கி குழந்தையின் பெயர் கேட்டு தத்தெடுக்க படையெடுக்கும் மக்கள்!
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்கு சிக்கிய நிலையில் பிறந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் திரண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கியை உலுக்கிய பூகம்பம்
துருக்கி - சிரிய எல்லையை அண்மித்துள்ள காஸியான்டெப் எனும் நகருக்கு அருகாமையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அனர்த்ததினால் பேரழிவைச் சந்தித்த துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகியுள்ளது.
குழந்தையை தத்தெடுக்க விரையும் மக்கள்
இந்த நிலையில் மீட்பு பணியாளரினால் தொப்புக்குள் கொடியுடன் பிறந்த குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தையை எடுத்து அதற்கான சரியான சிகிச்சைக் கொடுத்து மருத்துவர் காப்பாற்றியுள்ளார்கள்.
இந்த குழந்தைக்கு “ஆயா” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு அரபு மொழியில் “அதிசயம்” என்று பொருள்.
மேலும் ஆயா தற்போது மருத்துவமனையில் நலமாக இருப்பதாக குழந்தையை கவனித்து வந்த மருத்துவர் ஹனி ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்த குழந்தையை தத்தெடுக்க உறவினர்கள் உட்பட பல கோரிக்கைகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பக்கங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இந்த அதிசய குழந்தையை பெறும் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.