பிரபல சீரியல் நடிகர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கதாநாயகி வெண்ணிலாவின் தோழராக நடித்து வந்த ஹரி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்
தற்போது என்னதான் பல படங்கள் வந்திருந்தாலும், சீரியலுக்கு தான் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய இளம் ரசிகர்களையும் சில சீரியல்கள் கட்டிப்போட்டு வைக்கின்றது.
இவ்வாறு இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் கதாநாயகி கல்லூரி மாணவியாகவும், கதாநாயகன் அதே கல்லூரியில் ஆசிரியராக வருகின்றார்.
படிப்புக்கு தடை போடும் தந்தையை மீறி, வெண்ணிலா எப்படி படித்து பட்டதாரியாக மாறுகிறார் என்பதை காதல், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், கதாநாயகி வெண்ணிலாவின் தோழனாக நடித்து வந்தவர் ஹரி.
இவர் நேற்று சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சீரியல் குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் தற்கொலைக்கான காரணம் தற்போது வெளியாகாத நிலையில், பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.