சண்டை போட்டது போதுங்க விவாகரத்து பண்ணிக்கிடுவோம்! அதிரடி முடிவெடுத்த வி.ஜே அர்ச்சனா
கணவரை பிரிய முடிவெடுத்தாக வி.ஜே அர்ச்சனா கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அர்ச்சனா மீடியாவிற்குள் எப்படி வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் வி,ஜே . அர்ச்சனா. இவர் மீடியாவிற்கு வந்த பின்னர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வந்தார்.
இவர் முதன் முதலில் “காமெடி டைம்” மற்றும் “இளமை புதுமை” போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.
அர்ச்சனாவின் பேச்சி திறமையால் இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இதனால் இவரை சிலர் “அச்சு மா” என்ற செல்லப் பெயர் வைத்தும் அழைத்து வந்தார்கள்.
இந்நிலையில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின்னர் மீடியாத்துறையில் விலகியிருந்தார். தொடர்ந்து ரீ என்றி கொடுக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இவர் தொகுப்பாளினி மட்டுமல்ல சிறந்த என்டர்டைனராகவும் மாறினார்.
கணவரை விட்டு பிரிய போகிறேன்
இந்த நிலையில் கடந்த நாட்களில் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கணவரை பிரிய முடிவெடுத்தாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருவதால் அடிக்கடி வீட்டில் பிரச்சினை வருகிறாதாம்.
இதனால் விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார்களாம். இது போன்ற நிலையில் வினீத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைத்து விட்டது, அப்போது நாங்கள் இருவரும் முற்றாக பிரிந்து விடுவோம் என்ற பயத்தில் இருந்தோம்.
அப்போது எங்கள் மகள் சாரா இருவரிடம் பேசி எங்களின் காதலை புரிய வைத்துள்ளார். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தோமோ அப்படி இந்த 15 நாட்களாக வாழ்ந்து வருகிறோம். இதற்கு சாரா தான் காரணம், என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த அச்சு மா ரசிகர்கள், பிரியும் போது குழந்தைகளின் முகத்தை பார்த்தால் போதும் என கமண்ட் செய்து வருகிறார்கள்.