இறுதி வாரத்திற்கு அதிரடியாக களமிறங்கும் போட்டியாளர்கள் இவர்களாம்! சீக்ரட் ரூமிலிருந்து வெளிவரும் பிரபலம்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இறுதி வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்களுக்கான தெரிவு இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 5, தற்போது ஆறாவது சீசனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்று சுமார் 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இறுதி வாரத்திற்கு தெரிவாகும் போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் அடுத்த வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்களுக்கான தெரிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் அமுதவாணன்,அசீம், கதிரவன், மைனா உள்ளிட்ட பிரபலங்கள் இறுதி தருவாயில் களமிறங்கியிருக்கிறார்கள்.
இறுதி வாரத்திற்கும் போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதனால் போட்டிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதனை எப்படியாவது வென்று விடலாம் என்ற தைரீயத்துடன் போட்டியாளர்களும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இவர்களுடன் தனலெட்சுமி சீக்ரட் ரூமிலிருந்து வெளி வருவார் என தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் இதனை பார்க்கும் போது அசீம், கதிரவன், விக்ரமன் போன்றோர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.