ரக்ஷிதாவுக்கு warning கொடுத்த கமல்! ஓட்டிங்கில் நடந்த அதிரடி திருப்பம் - முதல் ஆளாக சேவானது இவரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் எச்சரிக்கை கொடுத்து முதல் நபராக ரக்ஷிதாவை அதிக வாக்குகளின் படி கமல் சேவ் செய்துள்ளார்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், தற்போது 14 பேருடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
சனிக்கிழமை நிகழ்ச்சி என்பதால் வழமையை விட சற்று சுவாரஷ்யமாக இருந்தது.
ஓட்டிங்கில் நடந்த அதிரடி திருப்பம்
இன்றைய நிகழ்ச்சியில் முதல் நபராக ரக்ஷிதாவை நடிகர் கமல்ஹாசன் சேவ் செய்தார்.
பிக் பாஸ் வீட்டில் அனைவரும் அடித்து கொண்டிருக்க ரக்ஷிதா மற்றும் அமைதியாக அவரின் ஆட்டத்தினை ஆடியுள்ளார் என்று பாராட்டினார்.
ரக்ஷிதாவுக்கு கமல் அறிவுரை
எனினும், நான் உங்களை எச்சரிக்கிறேன். அடுத்த முறை போராடி வெற்றி பெறுங்கள்.
அது தான் மக்களுக்கும், உங்களுக்கும் திருப்தியை கொடுக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக முதல் நபராக சேவான அசீம் இந்த வாரம் நடந்து கொண்ட விதம் குறித்து கடுமையாக கமல் எச்சரித்திருந்தார்.