Bigg Boss: களைகட்டும் பிக் பாஸ்... தெறிக்கவிடும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பழைய மற்றும் தற்போது இருக்கும் போட்டியாளர்களால் பிக் பாஸ் வீடு களைகட்டியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 11 நாட்களில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தற்போது 8 போட்டியாளர்கள் இருந்த நிலையில், வெளியே சென்ற பழைய போட்டியாளர்களையும் பிக் பாஸ் உள்ளே இறக்கியுள்ளார்.
இதனால் பிக் பாஸில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் கொடுத்துள்ள டாஸ்க், பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
மேலும் வெளியே சென்று மறுபடியும் திரும்பிய போட்டியாளர்கள் நல்லதொரு மாற்றத்துடன் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |