ஆண் குழந்தை பெறும் பாக்கியம் கொண்ட பெண்கள் யார் தெரியுமா? ஜோதிட விதியை கணிக்கும் ஜோதிடர்
பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு பெற்றோரின் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த குழந்தை பிறந்த பின்னரே ஒரு குடும்பம் முழுமையடைகிறது.
Rasipalan: சனி விட்டாலும் 2025 இல் ராகுவிடாது.. அதிக ஆபத்துக்களை சந்திக்கும் ராசிகள்- உங்க ராசி என்ன?
குழந்தைகள், தங்கள் பெற்றோரின் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறார்கள் மற்றும் அவர்களுக்கு பொறுப்புணர்வை வழங்குகிறார்கள் என முன்னோர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தையின் வருகை வீட்டில் மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
குழந்தை பிறந்ததால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இதனால் குடும்ப உறவுகள் வலுப்பெறுகிறது.
குழந்தைகளை போல அனைவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எனவே குழந்தைப் பருவம் தான் சிறந்தது என்று பலரும் கூறுகிறார்கள்.
அந்த வகையில், இப்படி செல்வத்தை குவிக்கும் குழந்தை பாக்கியத்தில் ஆண்குழந்தை பெற நினைப்பவர்களின் ஜோதிட விதியை ஜோதிடர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட விதி :-1
5-ம் பாவம் மேஷம், ரிஷபம், கடகமாக இருக்க வேண்டும்.
விளக்கம்
பின்வரும் லக்கின ஜாதகருக்கு அந்த லக்கினத்துக்கு 5-ம் இடமாக மேஷம், ரிஷபம், கடகமாக இருக்கும். தனுசு லக்கின ஜாதகருக்கு, மேஷம் 5 ஆம் இடமாக வரும். மகர லக்கின ஜாதகருக்கு, ரிஷபம் 5 ஆம் இடமாக வரும்.
மீன லக்கின ஜாதகருக்கு, கடகம் 5 ஆம் இடமாக வரும். இந்த 3 லக்கின ஜாதகருக்கு, ஆண் குழந்தை நிச்சயம்.
ஜோதிட விதி :- 2
5-ம் அதிபதி 5-ம் பாவம் சுப கிரக தொடர்பு (சேர்க்கை / பார்வை) இருத்தல் வேண்டும்.
விளக்கம்
இயற்கை சுபர்கள் :- புதன், குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன்
லக்கின சுபர்கள் :- அதாவது பாதகாதிபதி, மாரகாதிபதிகள், அஷ்டமாதிபதி தவிர இவர்கள் 5-ஆம் அதிபதியாகவோ, 5 ஆம் பாவத்தில் அமர்ந்தோ, சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது. இப்படி அமையப்பெறும் ஜாதகருக்கு, ஆண் குழந்தை நிச்சயம்.
ஜோதிட விதி :- 3
5-ம் பாவத்தில் உள்ள கிரகம் ஆண் நக்க்ஷத்திரத்தில் அமர வேண்டும்.
விளக்கம்
ஆண் கிரகங்கள் மற்றும் அவற்றின் நட்சத்திரங்கள் சூரியன் - கிருத்திகை, உத்திரம், உத்திராடம் செவ்வாய் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் குரு - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 5 ஆம் பாவத்தில் உள்ள கிரகம் மேற்படி நக்ஷத்திரத்தில் அமர்ந்தால், ஆண் குழந்தை நிச்சயம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).