ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய பாக்கெட் எதற்காக வைச்சிருக்காங்கனு தெரியுமா?
ஜீன்ஸ் பேண்ட்டில் இருக்கும் மிகச் சிறிய பாக்கெட் எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜீன்ஸ்
இன்றைய காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்டை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணிந்து வருகின்றனர்.
சிறுவர்கள் மட்டுமின்றி முதியவர்கள் வரை அனைவரும் அணிந்துவரும் ஜீன்ஸ் பேண்டை அடிக்கடி சலவை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இரண்டு அல்லது மூன்று முறை அணிந்த பின்பு துவைத்து கொள்ளலாம். வியர்வை போன்ற ஈரப்பதம் காணப்பட்டால், அதனை காய வைத்து அணிந்து கொள்ளலாம்.
ஜீன்ஸ் பேண்ட்டை ஜேக்கப் டேவிஸ் என்பவர் தான் வடிவமைத்துள்ளார். 19ம் நூற்றாண்டில் விவசாயிகளுக்காகவே இந்த ஆடையை தயாரித்துள்ளார்.
தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்களின் ஆடைகள் அடிக்கடி கிழிந்து விடுகின்றது. பல சமயங்களில் அவர்களால் புதிய ஆடைகளை வாங்க முடியவில்லை. இதனைத் தவிர்க்க நினைத்த டேவீஸ் சீக்கிரம் கிழியாத துணியால் ஆடைகளை தயார் செய்ய நினைத்து, டெனிம் துணியால் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்துள்ளார்.
சிறிய பாக்கெட் எதற்காக?
ஜீன்ஸ் பேண்டில் சிறிய பாக்கெட் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது இதில் நாணங்களை தவிர வேறு எதையும் வைக்க முடியாது. பொதுவாக வலது பக்கத்தில் இருக்கும் இந்த பாக்கெட்டிற்கு சுவாரசியமான வரலாறும் காணப்படுகின்றது.
இந்த சிறிய பாக்கெட் பெரும்பாலும் "வாட்ச் பாக்கெட்" என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம், 19 ஆம் நூற்றாண்டில் ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, கைக்கடிகாரங்கள் மணிக்கட்டில் கட்டப்படவில்லை.
பாக்கெட்டில் தான் வைத்து, அவ்வப்போது நேரத்தை அவதானித்துக் கொள்வார்கள். இவ்வாறு பாக்கெட் வாட்ச்சை வைப்பதற்காகவே இந்த சிறிய பாக்கெட் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
வேலை செய்யும் போது இதில் வைக்கப்படும் வாட்ச் கீழே விழாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், இப்போதெல்லாம், மிகச் சிலரே பாக்கெட் கடிகாரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இந்த சிறிய ஜீன்ஸ் பாக்கெட் தொடர்ந்து தயாரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், தற்போது இது ஃபேஷனாகவே மாறியுள்ளது. சிலர் இதில் நாணயங்கள், சாவிகள் அல்லது பிற சிறிய பொருட்களை அதில் வைத்துக் கொள்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |