Bigg Boss: பிக் பாஸில் சௌந்தர்யாவிற்கு என்ன நடந்தது? பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரும் தெறிக்க விட்டுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே 8 போட்டியாளர்கள் இருந்த நிலையில், பழைய போட்டியாளர்கள் 8 பேர் மறுபடியும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில் அவரவர்களுக்கு போடப்படும் பாட்டுக்கு நடனமாடுவதற்கு பிக் பாஸ் கூறியுள்ளார். இதில் அப்படி போடு போடு என்ற பாடலுக்கு சுனிதா மற்றும் சௌந்தர்யா இருவரும் நடனமாடியுள்ளனர்.
இதில் சௌந்தர்யா நடனமாடி முடித்த நிலையில், அப்படியோ கீழே படுத்துள்ளார். Are You Ok Baby என சக ஆண் போட்டியாளர் கூறுவதும் ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |