சிறந்த கணவனிடம் இருக்க வேண்டிய குணங்கள்... என்னென்னன்னு தெரியுமா?
பெண்கள் பொதுவாகவே தங்களின் திருமணம் குறித்து ஆண்களை விடவும் அதிக பயத்துடனும் ஆர்வத்துடனும் இருப்பார்கள்.
காரணம் பெண்கள் திருமணத்தின் பின்னர் ஆண்களை விடவும் அதிக மாற்றங்களை ஏற்கவேண்டி நிர்பந்திக்கப்படுகின்றார்கள்.
திருமணத்தின் பின்னர் பெண்கள் வீடு, உணவு முறை, சொந்தங்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பெரும்பாலான சமயங்களில் மாற்றங்களை சந்திக்க நேரிடலாம்.
இவ்வாறு பிறந்ததில் இருந்து வாழ்ந்த வீட்டை விட்டு வாழ்க்கை துணையான கணவனை நம்பி வெளியேறும் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக புரிந்துக்கொள்ளும் பக்குவம் கொண்ட ஆண் தான் சிறந்த கணவனாக இருக்க முடியும்.
இப்படி திருமண வாழ்வில் ஒரு பெண் மகிழ்ச்சியான இருக்க வேண்டும் என்றால் கணவனிடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய குணங்கள்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையில் சிறந்த புரிந்துணர்வு இருக்க வேண்டியது அவசியம்.
மனைவி தன்னை பற்றி பகிந்துக்கொள்ளும் எந்த விடயத்தையும் கணவன் வேறு யாரிடமும் ஒரு போதும் பகிர்ந்துக்கொள்ள கூடாது.
தாய், தந்தை , உடன் பிறப்புகள் மற்றும் நண்பர்கள் என யாரிடமும் மனைவின் குறைகள் பற்றி சொல்ல கூடாது. இது நல்ல கணவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணமாகும்.
ஒரு பெண் திருமணத்துக்கு பின்னர் அனைத்து உறவுகளை விடவும் கணவனை மட்டுமே முழுமையாக நம்புவாள்.
அதற்கு அர்த்தம் தன்னால் ஒன்றும் முடியாது என்பதல்ல, தனக்காக கணவன் இருக்கின்றான் அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இதனை கணவன் சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
எல்லா பெண்களுமே கணவனிடம் எதிர்பார்ப்பது தங்களுக்கான நேரத்தை கணவன் கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே.
அந்த விடயத்தை சரியாக செய்யும் குணம் இருக்கும் கணவன் மனைவியின் பார்வையில் அற்புதமானவராக இருப்பார்.
முக்கியமாக ஆண் பெண் என்று பிரித்து பார்க்காமல் தங்களுக்கு இருப்பது போன்று உணர்வுகள் , ஆசைகள், லட்சியங்கள் நிச்சயம் மனைவிக்கும் இருக்கும் என்று உணர்ந்து மனைவின் லட்சியத்துக்கு துணை நிற்கும் குணம் ஆண்களை மிகவும் அழகாக பிரதிபளிக்கும். ஒரு சிறந்த வளர்ப்பின் மூலம் மட்டுமே ஆண்கள் இந்த குணத்தை பெறுகின்றார்கள்.
மனைவி கணவனுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையையும், கணவனும் மனைவிக்கு கொடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறான குணங்களை கொண்டிருக்கும் போதே ஒரு ஆண் சிறந்த கணவனாக இருக்கின்றான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |