பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ரவீந்தர் செய்த வேலை... கடுப்பான பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது
பிக்பாஸ்8
பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. இது தான் பெரும்பாலானவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பதற்கு முக்கிய காரணம்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் முடியப்போகிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதால் பிக்பாஸ் ஜாலியாக டாஸ்க் கொடுப்பார் என போட்டியாளர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாகவே உள்ளது.
ஒவ்வொரு நாளும் யார் வெற்றியாளர் என்பதை யூகிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அந்தளவுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கின்றது.
இப்போது பிக்பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பலர் இப்போது மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என பிக்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ரவீந்தர் செய்த வேலை
தற்போது பிக்பாஸ் 8 சீசன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ரவீந்தர் வீட்டிற்குள் பிக்பாஸ் விதிகளை மீறும் வகையில் சில விடயங்களை பேசியுள்ளார்.
இதனை அடுத்து ரவீந்தரை கன்பிரஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ் " ரவீந்திரன் இந்த வீட்டுக்குனு நிறைய விதிமுறைகள் இருக்கு அதையும் மீரி வோட்டிங் பற்றி பேசி இருக்கீங்க.
மக்கள் ஒபினியன் பற்றி பேசி இருக்கீங்க" என்று சொல்கிறார். இதனால் அழுதுகொண்டே ரவீந்தர் சாரி பிக் பாஸ் என்று சொல்லும் காட்சியுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.