ட்ரெண்டிங் பாடலுக்கு அடக்கமான அலங்காரத்தில் குத்தாட்டம் போடும் இலங்கை அழகி! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க
குடும்ப பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு குத்தாட்டம் போடும் இலங்கை குயின் ஜனனியின் வீடியோ காட்சி லாஸ்லியாவிற்கே டப் கொடுத்துள்ளது.
சாதிக்க வேண்டும் என செய்த முயற்சிகள்
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு மீடியாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் ஜனனி.
இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கூட கிடைக்கவில்லை. இதனால் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
இதனை தொடர்ந்து இவர் இலங்கை மட்டுமல்ல பிக்பாஸ் பார்க்கும் அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்தார்.
அடக்கமான இலங்கை அழகி
இந்த நிலையில் பிக்பாஸ் நிறைவடைந்த நிலையில் தற்போது அவருடைய சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
தினமும் ஒரு புகைப்படம் அல்லது ஒரு ரீல்ஸ் வீடியோ போடுவதை பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
அந்த வகையில் குடும்ப பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள்,“ ஜனனியிடம் இந்த அடக்கமான அழகு தான் பிடிக்கும்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.