ரசிகர்களை சுண்டி இழுக்கும் இலங்கை அழகி! புடவையில் ரசிகர்களை வாயடைக்க வைத்த காட்சி
கருப்பு நிற சேலையில் கலக்கலான வீடியோக்காட்சியை வெளியிட்டு இலங்கை அழகி ஜனனி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6
இலங்கையில் பிறந்து சாதாரண தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் பிக் பாஸ் ஜனனி.
இவரின் கியூட்டான ரியாக்ஷன் இலங்கை மக்கள் மத்தியில் ஜனனிக்கு பெயரை எடுத்து கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 6 ன் ஒரு முக்கிய போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இவரின் அதீத நாட்டத்தினால் இந்திய மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்லப் பெயர் உருவாகியுள்ளது. மேலும் ஜனனி பிக் பாஸ் சீசன் 6 முதல் கொடுத்த பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார்.
இவருக்கு என ஒரு தனி ஆர்மி உருவாகி ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில் பிக் பாஸ் வீட்டில் அசீமிற்கு நிகரான வாக்குகளுடன் காணப்பட்டார்.
அடுத்த ஜெசியாக உருவெடுக்கும் ஜனனி
இந்த நிலையில் வாரம் வாரம் நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்ட ஜனனி, இறுதியாக ஒரு வாரத்தில் குறைவான வாக்குகள் என்ற அடிப்படையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
வெளியேறிய ஜனனி விளம்பரங்களிலும், ரீல்ஸ்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கருப்பு நிற சேலையில் “ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு” என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
ஜனனியின் அழகிற்கும் ரியாக்ஷனுக்கும் ரசிகர்கள் நிறைந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,“ கருப்பு நிற சேலையில் விண்ணை தாண்டி வருவாயா ஜெசி மாதிரி இருக்கீங்க.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.