புது மருமகளுடன் இணைந்து குத்தாட்டம் போடும் சீரியல் மாமியார்! மிரண்டு போன நெட்டிசன்கள்
புதிய மருமகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பாக்கியாவின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் டுவிஸ்ட்
தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் கதை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு தமிழக மக்கள் மத்தியில் அதிக ரீச் கொடுத்து வருகிறது.
ஆரம்பத்தில் சாதாரண குடும்பக்கதை போன்று கதையை நகர்த்திய இயக்குநர், அடுத்தடுத்து பல டுவிஸ்ட்களை கொடுத்து சீரியலில் புதிய திருப்பத்தைக் கொண்டு வந்துள்ளார்.
தற்போது கோபிக்கு வீட்டை கொடுப்பதா, அல்லது பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுவதா என்ற டுவிஸ்ட்டை வைத்துள்ளார்.
இதனால் நாளுக்கு நாள் பாக்கியாவின் செயல்பாட்டை வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அமிர்தாவிற்கு எழிலுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த திருமணத்தை பாட்டி ஏற்றுக் கொண்டாரா? அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து அமிர்தா காத்திருக்கிறார்.
புது மருமகளுடன் குத்தாட்டம் போடும் பாக்கியா
இதனை தொடர்ந்து பாக்கியாவும் அமிர்தாவும் ரீல்ஸ்கள் செய்து போடுவதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
சமிபத்தினங்களுக்கு முன்னர் பாக்கியாவின் வீட்டிற்குள் வேலைக்காக மட்டும் தான் சென்றிருப்பதாக அமிர்தாவை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது “ மால டம் டம் மஞ்சல டம் டம் ” என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பாடலுக்கு இருவரும் குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள், மருமகளை விட மாமியாரின் ரியாக்ஷன் செமையாக இருக்கிறது.” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.