பிக்பாஸ் வீட்டிற்குள் அடித்துக் கொண்ட நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைந்து வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமும் மணிகண்டனும் நிகழ்ச்சியொன்றில் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற அசீம் முதன்முதலில் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அவர் மாயா, பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு, ப்ரியமானவள், பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் தான் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வாகை சூடியினார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு சர்ச்சை இல்லையென்றால் சண்டையோடு தான் ஆரம்பிப்பார்.
ஆனாலும் இவருக்கு வாரம்தோறும் ஆதரவாளர்கள் அதிகரித்துக் கொண்டே வந்து இன்று வெற்றியாளர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துள்ளதாகவும் அண்மையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
மணிகண்டனுடன் அசீம்
இந்நிலையில், நிகழ்ச்சியொன்றிற்கு சென்றிருந்த அசீம் அங்கு தனது நண்பனான மணிகண்டனுடன் இணைந்து பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.