பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 1 டைட்டில் வின்னர் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? லீக்கான புகைப்படங்கள்..
பிக்பாஸ் மூலம் பிரபலமான அனிதா சம்பத் தற்போது தொகுப்பாளர் தொழிலை தாண்டி மற்றுமொரு தொழிலை செய்து வருகின்றார்.
மீடியா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகியவர் தான் அனிதா சம்பத். இதனால் அனிதா என்றால் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும் பிரபலமாக மாறினார்.
இதனை தொடர்ந்து அனிதா சம்பத்திற்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதிலும் அவர் கலந்து கொண்டார்.
பிக்பாஸில் கலந்து கொள்ளும் வரை அனிதாவிற்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
அவருக்கு மக்கள் தங்களால் முடிந்த அளவு ஆதர்வை வழங்கினார்கள். இது ஒரு புறம் இருக்கையில் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல் பரிசினையும் தட்டி சென்றார்.
தற்போது வெள்ளித்திரையிலும் கால் பதித்து விட்டார். இவர் நடிப்பில் சமிபத்தில்,“ தெய்வ மச்சான்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் அனிதாவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
மற்றுமொரு தொழிலை ஆரம்பித்த அனிதா
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தன்னுடைய கணவருடன் இணைந்து சொந்தமாக யூடியூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.
இவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய வீட்டு மாடியில் குட்டி தோட்டம் ஒன்றை உருவாக்கி அதில் காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார்.
இதிலிருந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள்,“ எத்தனை வேலை தான் செய்கீறிர்கள்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.