பிக்பாஸ் டைட்டில் வின்னரை திடீரென சந்தித்த விக்ரமன்: என்ன பேசியிருக்கிறார்கள் தெரியுமா?
முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னரை திடீரென சந்தித்திருக்கிறார் பிக்பாஸ் சீசன் 6இல் இரண்டாவது போட்டியாளரான விக்ரமன். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன். இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும். அதிலும் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பாரக்கப்பட்டிருந்தது.
பிக்பாஸ் மேடையிலும் இவருக்கு ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகி இருந்த வேலையில் டைட்டில் வின்னராக அசீம் கோப்பையை பெற்றதும் விக்ரமனுக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாகி இருந்தது.
மேலும், விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என இன்னும் அசீமின் வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் சுற்றிக் கொண்டிருக்கினர்.
டைட்டில் வின்னரை சந்தித்த விக்ரமன்
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4இல் டைட்டில் வின்னரான ஆரியை விக்ரமன் சந்தித்ததாக தெரிகிறது.
நான்காவது பிக்பாஸ் சீசனில் தொடக்கம் முதல் இறுதி வரை மிகவும் நியாயமாகவும், சரியான வழியிலும் போய்க் கொண்டிருந்த நடிகர் ஆரி, பலரின் பேவரைட் ஆகவும் இருந்து, டைட்டில் வின்னராகவும் ஆரி அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே சமீபத்தில் விக்ரமன் மற்றும் ஆரி ஆகியோர் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இவர்கள் திடீரென சந்தித்துக்கொள்ள என்ன காரணம் என தெரியவில்லை.