இவர் தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர்: அடித்து சொல்லும் ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து 6வது சீசன் இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பிரபல இந்திய தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷா, விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சுமார் 60 நாட்களுக்கு மேல் இருந்த ஆயிஷா, கடந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷா, பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது 6ஆவது சீசன் 65 நாட்கள் கடந்த நிலையில் இவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என ஆயிஷா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விக்ரமன் மற்றும் அசீம்
குறித்த நேர்காணலில் முதலில் நிகழ்ச்சியின் நெறியாளர், விக்ரமன் மற்றும் அசீம் குறித்த கருத்துக்களை ஆயிஷாவிடம் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஆயிஷா, கேள்வியை பாஸ் செய்யுமாறு ஜாலியாக பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஆயிஷா, அனைவரும் விக்ரமன் மற்றும் அசீம் குறித்துதான் அதிகம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு நெறியாளர், “அசீமுடன் பல நேரங்களில் நல்ல ஒரு பிணைப்பு உங்களுக்கு இருந்தது, மற்ற நேரங்களில் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டீர்கள்.
அதேபோல நீங்கள் வெளியே வரும்போது விக்ரமன் ஏதோ சொல்ல வர, நீங்கள் “ஓகே..” என சொல்லி இருந்தீர்கள். உங்கள் பார்வையில் அசீம் மற்றும் விக்ரமன் குறித்து சொல்லுங்கள்” என கேட்கிறார்.
இதன் பின்னர் பேசும் ஆயிஷா, “நான் இதை பத்தி பிக்பாஸ்க்கு வீட்டுக்குள்ளே நிறைய பேசி இருக்கேன்.
வெளியே பேசுவது புதுசு இல்ல. அசீம் அண்ணாக்கு பிக்பாஸ் அப்படின்னா என்ன என்று நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சவரு. கரெக்டா விளையாடிட்டு இருக்காரு.
எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே அவரோட கேமுக்கு நடுவுல நம்மள யூஸ் பண்ற மாதிரி ஒரு கேம் வரும்.
இவர்தான் டைட்டில் வின்னர்
தொடர்ந்து டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என கேட்கும்போது, “ஷிவின்” பெயரை சொன்ன ஆயிஷா, இதை தான் பிக்பாஸிலும் சொன்னதாக தெரிவித்ததுடன், 3 பேர் பெயரை சொல்லலாம் என கேட்டபோதும், ஷிவின் பெயரை முன்மொழிந்தார்.
திருநங்கை மாடலான ஷிவின் பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 60 நாட்களை கடந்து விளையாண்டு கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.