குறும்படம் போட்டு காட்டுறன்! மதிக்காத அனிதாவிடம் பிக்பாஸ் அதிரடி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா பிக்பாஸை மதிக்காமல் செயல்பட்ட நிலையில், அவருக்கு இந்த வார இறுதியில் குறும்படம் போடப்படுவதாக பிக்பாஸ் அதிரடியாக அறிவித்துள்ளது.
வித்தியாசமான டாஸ்க்
சண்டை, சச்சரவுகள் என்று சொன்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியினை 24 மணிநேரம் மக்கள் கண்டுகழித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளருக்கு புதிய புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகின்றது.
என்னதான் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு இருந்து வருகின்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் போன்று இல்லை என்று தான் கூற வேண்டும்.

கமலுக்கு பதில் சிம்பு
இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறினார்.
இவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், முதல் வாரம் மகிழ்ச்சியாக சென்ற நிகழ்ச்சி கடந்த வாரம் சற்று காரசாரமாக சென்றது. இந்த வாரம் யார் வெளியேறுகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகின்றது.
அனிதாவிற்கு குறும்படம்
இந்த வாரம் அனிதாவின் செயல் முகம்சுழிக்கும் நிலைக்கு சென்றுள்ளது. கெட்டவார்த்தையினை மிகவும் சரளமாக பயன்படுத்தி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸினை அவமதித்த அனிதா அவரை எதிர்த்தும் பேசினார். இறுதியில் கடுப்பான பிக்பாஸ் இந்த வார இறுதியில் குறும்படம் போட்டு பார்த்த பின்பு தான் கொடுத்த தண்டனையை நிறுவேற்றுமாறு கூறியுள்ளார்.