பிக்பாஸில் சரளமாக கெட்ட வார்த்தை பேசும் அனிதா! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா சம்பத், சரளமாக கெட்ட வார்த்தை பேசும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
உலகத் தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ், ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்ற நிகழ்ச்சியும் இதுதான்.
5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் எனும் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
சண்டைக்கு பஞ்சமில்லை
நிகழ்ச்சி தொடக்கம் முதலே பல்வேறு பிரச்சனைகள், சச்சரவுகள் எழுந்தன, ஒருவரையொருவர் தாக்கி பேசுவது, குரலை உயர்த்தி பேசுவது, நான் தான் பாப்புலர் என்ற ரீதியில் சண்டையிடுவது என பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் படத்திற்காக விலகிவிட, தற்போது சிம்பு தொகுத்து வழங்குகிறார்.

எல்லைமீறும் போட்டியாளர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து எல்லை மீறி வருகின்றனர்.
சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், அனிதா சம்பத் நிருப் முன்பு தகாத வார்த்தையை வெளிபடுத்தினார்.
அந்த வீடியோவில், நிருப் அனிதாவிடம் டேபிள் மேல இரண்டு வாட்டர் பாட்டில் இருக்கு. அத எடுத்துட்டு போய் அங்க வை என்று சொல்கிறார்.
அப்பொழுது, பேசிய அனிதா, தகாத வார்த்தைகளை சரளமாக அள்ளி வீசுகிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்த வீடியோ காட்சிகள் வைரலாக, நெட்டிசன்கள், அனிதாவா இது? என்ன சிம்ரன் இதெல்லாம்? என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
குடும்ப பெண் மாதிரி தோற்றமளிக்கும் நீங்களா இப்படி? என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
24 மணிநேரமும் ஒளிபரப்பாவதால் பெண்கள், இளைஞர்கள் ஏன் குழந்தைகள் கூட சில நேரங்களில் நிகழ்ச்சியை பார்த்து வருவதால், கொஞ்சமாவது கட்டுப்பாடுகள் வேண்டாமா? என்றவாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்! லீக்கான தகவல்