பிக்பாஸ் பணப்பெட்டியை ஓபன் செய்த அமுதவாணன்: அடுத்தடுத்து குட்நியூஸ் சொல்லும் பிக்பாஸ் பிரபலங்கள்!
பிக்பாஸ் போட்டியில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுதவாணன் நேற்றைய தினத்தில் புத்தம் புது கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
பிக்பாஸ் அமுதவாணன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டவர் தான் அமுதவாணன்.
இவர் தமிழ் திரையுலகில் நடிகர், நகைச்சுவையாளர், நடன ஆசிரியர் என பல திறமைகளை கொண்டவர். பிரபல தொலைக்காட்சி தொடர், ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 01, கலக்கப்போவது யாரு என பல நிகழ்ச்சியில் பணியாற்றி பிரபலமாகியுள்ளார்.
பிறகு வெள்ளித்திரையில் தாரைத் தப்பட்டை, பில்லா பாண்டி போண் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திக்கிறார். அதற்குப் பிறகுதான் பிக்பாஸ் போட்டியாளராகவும் களமிறங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வழமையாகவே இறுதிகட்டத்தை முடிவுக்கொண்டு வர பிக்பாஸ் வீட்டிற்கு முன்பாக பெறுமதியான பணப்பெட்டியை வைப்பது வழக்கம். அந்தப் பணப்பெட்டியை இந்த சீசனில் அமுதவாணன் தான் எடுத்துச் சென்றார்.
குட்நியூஸ்
இந்நிலையில் அமுதவாணன் தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய அமுதவாணன் தற்போது அந்தப் பணத்தை வைத்து தான் கார் வாங்கியிருக்கிறார் எனவும் அரசல் புரசலாக பேசப்படுகிறது.
மேலும், நேற்று முன்தினம் பிக்பாஸ் சக போட்டியாளரான ரக்சிதாவும் கார் ஒன்றை வாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.