இதனால் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினேன்: மனம் திறந்து பேசிய அமுதவாணன்!
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் பணப்பெட்டியுடன் அமுதவாணன் வெளியேறியிருந்தார். தற்போது அவர் பணப்பெட்டியுடன் வெளியேறியதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
பணப்பெட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கின்றது. இந்நிலையில் வழமையாகவே இறுதிகட்டத்தை முடிவுக்கொண்டு வர பிக்பாஸ் வீட்டிற்கு முன்பாக பெறுமதியான பணப்பெட்டியை வைப்பது வழக்கம்.
அவ்வாறே இந்த சீசனிலும் வைக்கப்பட்டது. இதில் ட்டுவிஸ்ட் வைக்கும் வகையில் முன்னதாக பண மூட்டையும் வைக்கப்பட்டிருந்தது. இதனை உஷாராக கதிர் எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தார்.
அமுதவானன்
இந்நிலையில், இந்த முறை பணப்பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியும் இருந்தது. இவ்வாறு இருக்கையில் அப்பணப்பெட்டியை அமுதவாணன் எடுத்துச்சென்றது சக போட்டியாளர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமுதவாணன் இவ்வாறு ஏன் முடிவெடுத்ததிற்கு காரணம் என்ன என சகபோட்டியாளர்கள் கேட்க அமுதவாணன் பதிலளித்திருக்கிறார். அதில் அவர் தெரிவித்ததாவது,
"கெத்த மெயிண்டைன் பண்ணி கடைசில இப்படி ஆகிட்டோமோ ன்னு யோசிக்க கூடாது. இது எப்படியும் எனக்கு யூஸ் ஆகும். இது நெறய ஹெல்ப்-ஆ இருக்கும்.
அதுனால எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு தான் எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.
ஆறுதல் கூறிய விக்ரமன்
அமுதவாணன் இவ்வாறு கூறுகையில், அதற்கு விக்ரமன் எப்படியா இருந்தாலும் 5 பேர்ல ஒருத்தர் தான் வெற்றியாளர். அதுனால இது நல்ல முடிவு.
நீங்க எட்டரை கோடி தமிழ் மக்களோட நெஞ்சத்துல ராஜாவா இருக்கீங்க. இந்த வீட்டுல நான் அதிகமா பேசி, சிரிச்ச ஒரு நபர் என்றால் அது நீங்கதான்.
நான் வந்த புதிதில் சொன்னேன்.
எளிய மக்களுக்கான கலையை நீங்க கையில வச்சிருக்கீங்க. நீங்க ஒரு எளிய கலைஞன். அதேநேரத்துல பிரம்மாண்ட கலைஞன். பொதுமக்களோட அன்பையும் பெற்றுட்டீங்க என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.