பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக்பாஸ்: வீட்டிற்குள் சென்ற முதல் போட்டியாளர் யார் தெரியுமா?
பிரபல ரிவியில் தற்போது 6 மணிக்கு பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
இதில் முதல் போட்டியாளராக கானா பாடகி இசைவாணி உள்ளே சென்றுள்ளார்.இரண்டாவது போட்டியாளராக நடிகர் ராஜு உள்ளே சென்றுள்ளார். இவர் பிரபல ரிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துள்ளார். ராஜு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, சின்னத்திரையில் நடிகரான ராஜு தற்போது பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.
மூன்றாவதாக ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா களமிறங்கியுள்ளார். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தற்போது ஆடை வடிவமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வமுடையவர்.
நான்கவது போட்டியாளராக தொகுப்பாளர் மற்றும் யூடியூப்பரான அபிஷேக் ராஜா சென்றுள்ளார். ஐந்தாவது போட்டியாளராக திருநங்கையான நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார். மிஸ் சென்னை டூ மிஸ் வேல்ர்ட் ஆக 5 வருஷம் ஆகியிருக்கு என நமிதா மாரிமுத்து கமல்ஹாசினிடம் பகிர்ந்துக்கொண்டார்.
ஆறாவது போட்டியாளராக விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளரான பிரியங்கா ( Priyanka Deshpande ) உள்ளே செல்கிறார்.
ஏழாவது போட்டியாளராக அபிநய் (Abinay) உள்ளே நுழைகிறார்.நடிகையர் திலகம் சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் புதுவிதமான விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு உதவுவது உள்ளிட்ட சமூகம் சார்ந்த விஷயங்களை செய்து வருவதாக கமலிடம் பகிர்ந்துக்கொண்டார்.அபிநய்க்கு கமல்ஹாசன் மாமன் முறை என்றும் கமல் கூறினார்.
எட்டாவது போட்டியாளராக சீரியல் நடிகை பவ்னி மற்றும் ஒன்பதாவது போட்டியாளராக பாடகி சின்ன பொண்ணும், பத்தாவது போட்டியாளராக நடிகை நடியா சாங் சென்றுள்ளனர்.
11வது போட்டியாளராக வருண் செல்கிறார். 12வது போட்டியாளராக நடிக் இமான் அண்ணாச்சி மற்றும் 13வது போட்டியாளராக மொடல் ஸ்ருதி ஜெயச்சந்திரனும் செல்கின்றனர்
14வது போட்டியாளராக மொடல் அக்ஷரா ரெட்டியும், 15வது போட்டியாளராக ராப் பாடகி Iykki Berry செல்கின்றனர். 16வது போட்டியாளராக தாமரை செல்வியும், 17வது போட்டியாளராக நடிகர் சிபி சந்திரன் மற்றும் 18வது போட்டியாளராக நிரூப் நந்தகுமார் செல்கின்றனர்.