Bigg Boss: இந்த வாரம் நான் கிளம்பிடுறேன்... மொட்டை கடிதாசியால் அழுது புலம்பும் பாரு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் பாரு மிகவும் பரிதாபமாக காணப்பட்டு கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பள்ளிக்கூடம் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் பாரு வார்டனாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும் போட்டியாளர்கள் மொட்டை கடிதாசி ஒன்றில் பாருவின் தனிப்பட்ட விடயத்தினை எழுதி அனுப்பியுள்ளனர்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத பாரு பள்ளி மேலாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.
முதல் ப்ரொமோ காட்சியில் யார் இந்த கடிதத்தினை எழுதியது? என்று கேள்வி எழுப்பினார்.. ஆனால் யாரிடமிருந்தும் எந்தவொரு பதிலும் வரவில்லை.
Ethirneechal: துப்பாக்கி முனையில் ஜனனி... சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட சக்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் பாரு தன்னை ஏன் இப்படியொரு வேலைக்கு அனுப்பியுள்ளீர்கள் என்றும் இந்த வாரத்துடன் தான் கிளம்பிவிடுவதாக கூறி வினோத்திடம் கதறி அழுகின்றார்.
பள்ளிக்கூட டாஸ்க் மிகவும் காமெடியாக செல்லும் என்று நினைத்தாலும், போட்டியாளர்கள பழைய வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் சீண்டுவது மீண்டும் சண்டையை ஏற்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |