பார்கவிக்கு இனி பிரச்சினை வராது.. சீரியல் சீக்ரெட்டை உடைத்த இயக்குநர்
எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் சின்னத்திரை ரசிகர்களின் பரிந்துரைகளுக்கமைய பார்கவிக்கு இனி பிரச்சினைகள் வராது என அடுத்தடுத்து வரும் காட்சிகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது.
தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.

சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் சக்தியை கடத்திச் சென்று வைத்திருக்கிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் சக்தியை தேடிச் செல்லும் ஜனனியையும் ராணா, நெத்தியில் துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார்.
ரகசியத்தை உடைத்த இயக்குநர்
இந்த நிலையில், பார்கவிக்கு அறிவுக்கரிசி அடுத்தடுத்து பிரச்சினைகளை கொடுத்து கொண்டிருக்கிறார். இது குறித்து வீட்டிலுள்ளவர்கள் கேட்டாலும் பெரிதாக யாரும் பதில் சொல்வது போன்று இல்லை.
இந்த விடயம் குறித்து இயக்குநரிடம் சின்னத்திரை ரசிகர்கள் கேட்ட பொழுது, “வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டங்களை பார்த்து வளர்ந்த பார்கவிக்கு இனி சீரியலில் எந்தவித பிரச்சினையும் வராது. சீரியல் கதைக்களத்தை ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஏற்றால் போன்று மாற்ற முடியாது. சினிமா திரைப்படங்கள் போன்று அல்லாமல் சீரியல் இப்படியானதொரு பாணியில் தான் செல்லும்..” என பேசியிருக்கிறார்.

இந்த நேரலை காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன், “ ஜனனிக்கு வரும் ஆபத்துக்களை நீங்கள் பார்க்க வேண்டும்..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |