ஆண்களே இனி ஒதுக்காதீங்க.. பச்சை மிளகாய் சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா?
இந்திய சமையல் முக்கியமான பொருட்களில் ஒன்று தான் பச்சை மிளகாய்.
பெரும்பலான உணவுகளில் பச்சை மிளகாய் சேர்த்திருப்பார்கள். இதன் காரம், மணம், சுவை ஆகியவற்றை விட ஆரோக்கிய பலன்கள் அதிகமாக கொண்டுள்ள காய்கறி வகைகளில் ஒன்று.
பச்சை மிளகாயில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் தான் எமது முன்னோர்கள் பச்சை மிளகாயை மறக்காமல் உணவில் சேர்த்து வந்தனர்.
இன்னும் சில மருத்துவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்துக்கள் கூட குறைவு என பேசியிருக்கிறார்கள்.

அந்த வகையில், ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது என்னென்ன பலன்கள் கிடைக்கும். எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆண்கள் சாப்பிட்டால் என்ன பலன்?
1. உடல் எடை குறைப்பு
பச்சை மிளகாயில் உடலை ஏற்றும் கலோரிகள் பெரிதாக இல்லை. அவற்றை சாப்பிட்டால் அதிலுள்ள கேப்சைசின் என்ற முக்கிய மூலப்பொருள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. பச்சை மிளகாய் சாப்பிடும் ஒருவருக்கு கொழுப்பு செல்கள் உடைக்கப்பட்டு, வைட்டமின் பி5 மூலம் கொழுப்பு அமிலங்களின் முறிவு எளிதாக்கப்படுகிறது.

2. சரும ஆரோக்கியம் மேம்படும்
பலருக்கும் ஒளிரும் சருமம் வேண்டும் என்பதே பெரிய ஆசையாக இருக்கும் சருமம் பார்ப்பதற்கு அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் பச்சை மிளகாய் சாப்பிடலாம். சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் சி ஆகியன சரும செல்களின் சேதங்களை குறைக்கிறது.
மேலும், பச்சை மிளகாயில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் சுருக்கங்கள், வடுக்கள், முகப்பரு, தடிப்புக்கள் மற்றும் மருக்கள் ஆகியவற்றை குறைக்கிறது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு தேவையான பளபளப்பை கொடுக்கிறது.
[2X4E4W
3. மனநிலை மாற்றம்
வேலை மற்றும் குடும்பத்தினரால் கொடுக்கப்படும் அழுத்தங்களை எப்படி சரிச் செய்யலாம் என ஓடிக் கொண்டிருக்கும் ஆண்களை உற்சாகப்படுத்தும் வேலையை பச்சை மிளகாய் செய்கிறது. அதிலுள்ள கேப்சைசின் என்ற பொருள் மன அழுத்த எதிர்ப்பு மருந்தாக செயற்பட்டு, மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது. ஆண்கள் அவசியம் பச்சை மிளகாய் தினமும் 2 சாப்பிட வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |