கிருத்திகா உதயநிதி Fitness Routine- மாமியார் செய்த உதவி
இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் கிருத்திகா உதயநிதி அதே எடையுடன் இருப்பதற்கான முக்கியமான காரணத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும், தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னரும் எடை குறையாமல் அப்படியே இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசிய பேட்டி காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
கிருத்திகா சொன்ன Fitness Tips
உடல் எடையை அப்படியே வைத்திருக்கும் கிருத்திகா பேசுகையில், “ நானும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்து விட்டேன். ஆனாலும் எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் உடற்பயிற்சியை என்னுடைய வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாற்றிக் கொண்டேன்.

இதனை நான் மட்டுமல்ல என்னுடைய வீட்டிலுள்ளவர்களும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். உடல் நலத்தில் எங்கள் குடும்பத்திற்கு பெரும் அக்கறை உள்ளது.
நான் ஜிம், யோகா, நடைப்பயிற்சி ஆகிய மூன்றையுமே கலந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கிறது. உணவில் பெரியளவில் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. ஏனெனின் எல்லா உணவுகளிலும் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. அதனால் உணவுகளில் எந்தவித கட்டுபாடுகளும் வைத்துக் கொள்ளமாட்டேன்.

சில சமயங்களில் சாப்பாடு சுவையாக இருந்தால் 4 வேளைகள் கூட சாப்பிடுவேன். எனக்கு சைவ உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும், அதே போன்று என்னுடைய மாமியார், மில்லட் தோசை, முடக்கத்தான் தோசை, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி உணவுகள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்து கொள்வார். அவருடன் சேர்ந்து நான் இது போன்று ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிடுவேன்.
சரும பராமரிப்பிற்காக காலையில் சன்ஸ்க்ரீன் இரவில் நைட் க்ரீம் போடுவேன். அன்றாடம் சரும ஆரோக்கியத்திற்காக போராடுவதில்லை..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |