பார்வதியுடன் நெருக்கமான கம்ருதீன்- வைரலாகும் ஒற்றை புகைப்படம்
பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக விளையாடிக் கொண்டிருக்கும் பார்வதி- கம்ருதீன் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Ethirneechal: துப்பாக்கி முனையில் ஜனனி... சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட சக்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் மற்றும் கெமி என கொண்டாடப்படும் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியேறுவது உறுதி
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்த வேளையில், இரண்டு கார்கள் உள்ளே அனுப்பப்பட்டு, கெமி வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டார். அவருடன் வெளியில் அனுப்பப்பட்ட பிரஜன் மீண்டும் உள்ளே தன்னுடைய யதார்த்தமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பிரஜன், திவ்யா, சாண்ட்ரா விளையாட்டு ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் இவர்களை குறி வைத்து விக்ரம் தரமான வேலைபாடுகளை பார்க்கிறார்.

இதற்கிடையில், School டாஸ்க்கில் யாரோ எழுதிய கடிதம் பார்வதியின் கைக்கு சிக்கியுள்ளது. அது யார் என விசாரிக்கும் பொழுது பள்ளி முகாமைத்துவத்தில் இருப்பவர்கள் பார்வதியை சரியாக நடத்தவில்லை.
இதனால் மனம் உடைந்து போன பார்வதி, “ நானும் மனுஷே தானே.. ஏன் இப்படியான டாஸ்க்களை கொடுக்கிறார்கள். இந்த வாரத்துடன் நான் வெளியில் செல்கிறேன்..“ என பேசுகிறார். பார்வதி என்ன தான் உடைந்து அழுதாலும், கம்ருதீனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் படு வைரலாக்கப்பட்டு வருகிறது.
அதில் அவர்கள் இருவரும் காதலர்கள் போன்று அமர்ந்திருக்கிறார்கள். அப்போது பிக்பாஸ் கம்ருதீனுடன் பேச்சு கொடுத்து இருவரையும் பிரித்து வைக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |