Ethirneechal: துப்பாக்கி முனையில் ஜனனி... சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட சக்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் ராமசாமியிடம் சிக்கிய ஜனனி துப்பாக்கி முனையில் இருக்கும் நிலையில், சக்தி சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஜனனி மற்றும் சக்தியினை சித்ரவதை செய்து வருகின்றார்.
வீட்டில் அறிவுக்கரசியின் ஆட்டம் அதிகரித்துள்ள நிலையில், குணசேகரன் தாய்க்கு தற்போது சுயரூபம் தெரியவந்துள்ளது. சக்தியை தேடிச்சென்ற ஜனனி ராமசாமியிடம் சிக்கியுள்ளார்.

அவர் முதலில் ஜனனியை கொலை செய்துவிட்டு பின்பு சக்தியின் உயிரை எடுப்பதாக கூறி துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார்.
சக்தியை ராமசாமி சவப்பெட்டியில் அடைத்து வைத்துள்ள நிலையில், ஜனனி சக்தியை நினைத்து கதறி துடித்துள்ளார். வீட்டில் தர்ஷன் பார்கவி திருமண ஏற்பாட்டை அறிவுக்கரசி தீவிரமாக செய்து வருகின்றார்.
இத்தருணத்தில் ராணா உள்ளே எண்ட்ரியாகி அனைவரையும் காப்பாற்றுவதோடு, வீட்டில் தர்ஷனின் திருமணம் தடுத்து நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |