டைட்டில் வின்னர் ஆனாலும் பரிசுத் தொகை குறைவுதான்: பிக்பாஸ் வரலாற்றிலே அசீமிற்குதான் குறைந்த பணப்பரிசு!
பிக்பாஸ் வரலாற்றிலேயே டைட்டில் வின்னருக்கு குறைவான பரிசுத் தொகை வழங்கப்பட்ட சம்பவம் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடியது.
21போட்டியாளர்களுடன் ஆரம்பான இப்போட்டி மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள்.
அவ்வாறு 18 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது இறுதிகட்டத்திற்கு 3 போட்டியாளர்கள் மாத்திரம் இறுதிவரை விளையாடியிருந்தார். இதில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய போட்டியாளர்களே இறுதிவரை விளையாடினார்கள்.
இறுதியில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளராக அசீம் வாகை சூடிக்கொண்டார்.
பரிசுத் தொகை
அசீம் என்னதான் டைட்டிலை வின் பண்ணினாலும் அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை மிகவும் குறைவுதான். அதாவது, 5 சீசன்களை கடந்தாலும் பிக்பாஸ் வெற்றியாளர்களுக்கு குறைவான பரிசுதொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் பணப்பெட்டி வைப்பது வழக்கமானதொன்றாகும். ஆனால் இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக பணப்பெட்டியும் வைக்கப்பட்டது, பண மூட்டையும் வைக்கப்பட்டது.
[H940D ]
இந்த சீசனில் ஆரம்பத்தொகையாக 3 இலட்சம் வைக்கப்பட்டிருந்தது. இதனை கதிர் எடுத்துக் கொண்டு வெளியேறியிருந்தார். பிறகு 11,75,000 ரூபா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறினார்.
பிக்பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே இதில் கதிரவன் ஏற்கனவே பணப்பை டாஸ்க்கில் எடுத்ததால் 3 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.
அதே போல இரண்டாம் பணப் பெட்டி டாஸ்கில் 13 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அமுதவாணன் வெளியேறியதால் அந்தப் பணமும் கழிக்கப்பட்டு, அசீமுக்கு கோப்பையுடன் சேர்த்து ரூ.34 லட்சம் கிடைத்ததுள்ளது.
இதில் 30 சதவீதம் வரி போக அசீமிற்கு மொத்தம் 24 லட்ச ரூபாய் மட்டுமே கிடைத்து உள்ளது,
பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் குறைவான வெற்றியாளர் தொகையை அசீம் பெற்று இருக்கிறார்