வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சேர வேண்டுமா? பணப்பெட்டியை இந்த திசையில் வைங்க
கட்டிடக்கலையில் இந்துக்களால் பின்பற்றப்படும் ஒரு அறிவியல் சார்ந்த ஒரு பழம் பெரும் முறை வாஸ்து.
வளிமண்டலத்தின் பல்வேறு ஆற்றலில் இருந்து உருவானது இந்த வாஸ்து என்று நம்பப்படுகிறது.
வாஸ்துவின் மூலம் அமைதி, நேர்மறை அதிர்வுகள் மற்றும் செல்வச் செழிப்பு ஏற்படுவதாக உணரப்படுகிறது. வீட்டில் பணப்பெட்டியை வைப்பதற்கும் வாஸ்து அதிகமாக பார்க்கப்படுகின்றது.
பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்?
வடக்கு திசை என்பது குபேரரின் திசையாகும். குபேரர் செல்வம் மற்றும் வளங்களின் கடவுள் ஆவார். வாஸ்துபடி, விலைமதிப்பான பொருட்களை வைக்கும் பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் இரட்டிப்பாகும் என்று நம்பப்படுகிறது.
பணப் பெட்டியை வடக்கு திசையில் வைத்தாலும், அதன் கதவை தெற்கு திசை நோக்கி வைக்கக் கூடாது. வளங்களின் கடவுளான லக்ஷ்மி, தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது.
உங்கள் வீட்டின் லாக்கர் அல்லது பணப் பெட்டியை வடக்கு திசை நோக்கி வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசை நோக்கி வைக்கலாம்.
ஒரு அறையின் நான்கு மூலைகளில் எதாவது ஒன்றில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். குறிப்பாக வட கிழக்கு, தென் கிழக்கு அல்லது தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டாம். உங்கள் பணப்பெட்டி வடக்கு திசை நோக்கி திறப்பதை போல் வைக்க வேண்டும்.
தெற்கு திசை நோக்கி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் துரதிர்ஷ்டம் ஏற்படுகிறது மற்றும் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதாகும் நம்பப்படுகிறது.
வாஸ்து படி, பூஜை அறையில் பணப்பெட்டி அல்லது லாக்கரை வைக்க வேண்டாம் என்று கூறப்படுகின்றது.
வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பினால் அவதிப்படுகிறீர்களா? தினமும் இதை சாப்பிட்டாலே போதும்
பணப்பெட்டியை எவ்வாறு பராமரிப்பது?
தூய்மையான மற்றும் நன்றாக பராமரிக்கப்படும் இடத்தில் தான் செல்வம் சேரும். ஆகவே உங்கள் பணப்பெட்டியை எப்போது சுத்தமாக மற்றும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியின் உள்ளே வடக்கு திசையில் திருமகள் லக்ஷ்மி அமர்ந்த நிலையில் உள்ள உருவம் கொண்ட ஒரு வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டும்.
பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது எந்த ஒரு கோப்பு மற்றும் ஆவணத்துடன் இணைத்தும் வைக்க வேண்டாம். எப்போதும் உங்கள் பணப்பெட்டியை காலியாக வைக்க வேண்டாம். குறைந்த பட்சம் ஒரு ரூபாயாவது பணப்பெட்டியில் இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டின் முதல் மற்றும் கடைசி அறையில் பணப்பெட்டி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெண்டிலேடர் அல்லது ஜன்னல் அருகில் பணப்பெட்டியை வைக்க வேண்டாம். இப்படி இருப்பது , செல்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று விடும் என்பதைக் குறிக்கிறது.
நல்ல வெளிச்சமான மற்றும் நேர்மறை அதிர்வுகள் அதிகம் உள்ள அறையில் பணத்தை வைப்பதால் அது இரட்டிப்பாவதுடன் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும் என்று வாஸ்துவின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.