இலங்கைக்குள் குட்டி இலங்கை: புதிய நாட்டுக்குள் சென்ற அனுபவம் இருக்கும்
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிக அழகான ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இந்த இடம் மக்களை ஈர்க்கும் வகையில் புதிய புதிய அம்சங்களுடன் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த றீ(ச்)ஷா இடம் புது அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த றீ(ச்)ஷா பண்ணையின் இயற்கை எழில்மிகு தோற்றங்களையும், சூழலையும் அதனோடிணைந்த பண்ணையின் செயற்பாடுகளும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
பொதுவாக இது தமிழர்களின் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாகவே சில வண்ண நிறங்களுடன் சுவர்களில் ஓவியங்கள் உயிரூட்டும் வகையில் காணப்படுகிறது.
மேலும், அனைத்து மாவட்டங்களில் இருக்கும் பொது அம்சங்களையும் ஈர்க்கும் வகையில் றீ(ச்)ஷா பண்ணையை அமைத்துள்ளனர்.
இன்னும் புதிதாய் உலக அதிசயங்களை சிறிய சிறிய வடிவில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் விடுமுறையை சந்தோசமாக நீங்கள் குடும்பத்துடன் கழித்துக்கொண்டாட Reecha Organic Farm உங்களுக்கு சிறந்ததாக அமையும்.