அழிவின் விளிம்பில் உள்ள தமிழர்களின் கலாச்சாரம்... இலங்கையில் தலைத் தூக்கும் அதிசயம்! தீயாய் பரவும் புகைப்படம்
நகரீகம் வளர வளர தமிழர்களின் கலைக், கலாச்சாரம் மறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. மாசிபிறந்து விட்டாலே முன்பு எல்லாம் அர்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, காமன்கூத்து என கூத்துக்கள் குதூகலிக்கும்.
இன்று விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களில் விதிவிலக்காக இது போன்ற சம்பவங்கள் மேடையேற்றப்படுகின்றது. அண்மையில் இலங்கையில் பொன்னர் சங்கர் கூத்து நாடகம் போடப்பட்டுள்ளது.

இதன் போது காலி போன்று கூத்துக் கட்டிய நபருக்கு அருள் வந்து சேவலை வாயில் கவ்வியப்படி ஆடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதேவேளை, 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்த மலையக தோட்ட தொழிலாளர்கள் தங்களது உழைப்பை மட்டும் இலங்கைக்கு கொண்டு போக வில்லை.
தமது பாரம்பரிய கலைகளையும் இங்கு கொண்டு சென்றனர். சமீப காலம் வரை இக்கலைகள் எம்மக்களின் வாழ்வோடு பின்னிப்பினைந்திருந்தன. அவர்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டன என்பதற்கு இது போன்ற சம்பவங்களே ஆதாரம்.







