புரதச்சத்து உடம்பிற்கு மிக முக்கியம் ஏன்? புரதம் நிறைந்த உணவுகள் இதோ
உடலுக்கு தேவையான புரதச்சத்தைக் கொடுக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புரதத்தின் முக்கியத்துவம்
புரதம் உடலின் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உயிரணுக்களின் கட்டுமானப் பொருளாக உள்ளது.
நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபாடிகள் போன்ற புரதங்கள் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகின்றன.
புரதம் தசை, எலும்பு மற்றும் பிற திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் புரதம் அவசியம்.
புரதம் உடல் திரவங்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
புரதம் நிறைந்த உணவுகள்:
முட்டையில் அதிக புரதங்களுடன், அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.
இதே போன்று தயிரில் அதிக புரதச்சத்து உள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்திற்கு உறுதியாக இருக்கும்
புரதச்சத்து நிறைந்த உணவில் ஒன்று பனீர் ஆகும். கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது.
பாதாமில் புரதம் மட்டுமின்றி ஆரோக்கியமான கொழுப்புகளும், வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளது.
மேலும் சிக்கன் போன்ற உணவில் நம் உடம்பிற்கு தேவையான புரதம் நிறைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |