அடிக்கடி குமட்டல், வாந்தி வருகிறதா? அப்போ இந்த கசாயம் குடிங்க- உடனடி நிவாரணம்
குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு சில எளிய மற்றும் உடனடி நிவாரணம் தரும் கசாயங்கள் உள்ளன.
இவை பொதுவாக வீட்டு வைத்திய முறையில் பயன்படும் மற்றும் இயற்கையானவையாகவும், பாதுகாப்பானவையாகவும் இருக்கின்றன வேறு எந்த நோய்களும் இல்லை.
ஆனால் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினை இருந்தால் வீட்டில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து கசாயம் செய்து குடிக்கலாம்.
அப்படியாயின், குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் கசாயம் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வாந்தி நல்லதா, கெட்டதா?
வயிற்றில் தேவையில்லாமல் இருக்கும் உணவுகள் மற்றும் நச்சுப் பொருள்கள் தான் வாந்தியாக வெளியில் வருகிறது. ஒருவருக்கு வாந்தி வருவது போன்று தோன்றினால் முடிந்தளவு அதனை வெளியேற்றும் வேலைப் பார்ப்பது சிறந்தது.
தொடர்ந்து 4 அல்லது 5 முறை இருந்தால் தண்ணீர் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தலைசுற்றல், மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்க வேண்டும் என்றால் முதலில் வாந்தி வெளியேறுவதை தடுக்க வேண்டும். குழந்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டால் சோர்ந்து விடுவார்கள். அது ஆபத்தை உண்டுபண்ணலாம்.
காரணங்கள்
- கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் வாந்தி வர வாய்ப்பு உள்ளது.
- உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுதல்.
- சிலர் பிடித்த சாப்பாட்டை பார்த்து விட்டால் அதனை அளவுக்கு அதிகமாக உண்பார்கள். இது வாந்தி மற்றும் குமட்டல் வர வாய்ப்பு உள்ளது.
- இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது போன்ற நோய்நிலைமைகள்.
- முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் உள்ளிட்ட நோய் காரணிகளால் வாந்தி ஏற்படும்.
- வயிற்றுப்போக்கு, காலரா
- சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி
- மஞ்சள் காமாலை
- கணைய அழற்சி
- பித்தப்பை பிரச்சினைகள்
- சிறுகுடல் அடைப்பு சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல்
- வலி நிவாரணி மாத்திரைகள்
- புற்றுநோய் மருந்துகள்
- கர்ப்பகால வாந்தி
- உளவியல் காரணங்கள்
- வேறு சில காரணங்கள்
நாட்டு மருந்து
தேவையான பொருட்கள்
- இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- சிறிது ஜீரகம் (சுடவைத்து அரைத்தது) – ½ டீஸ்பூன்
- வெந்நீர் – 1 கப்
தயாரிப்பு முறை
வெந்நீரில் இஞ்சி, எலுமிச்சை சாறு, ஜீரகம் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின்னர், வடிகட்டி சூடாகவே அல்லது சூடு ஆறிய நிலையில் குடிக்கலாம். இது வாந்தி மற்றும் குமட்டலை கட்டுக்குள் வைக்கும்.
பலன்கள்
- இஞ்சி மந்தமான வயிற்றைச் சீராக மாற்றும். இதனால் வயிற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
- எலுமிச்சைப்பழ வாசனை வாந்தி மற்றும் குமட்டல் உணர்வை கட்டுப்படுத்தும்.
- கசாயத்தில் சேர்க்கப்படும் ஜீரகம் வயிற்றில் செரிமானமடையாமல் உள்ள உணவுகளை செரிமானத்திற்குள்ளாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |