கர்ப்பமான காலத்தில் முக சுருக்கம் குறித்து கவலை படுகிறீர்களா? இது உங்களுக்கான டிப்ஸ்!
பொதுவாக பெண்கள் கருவுற்று இருக்கும் போது முகத்திலுள்ள தோல்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகள் சில ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படலாம். தொடர்ந்து கர்ப்பக் காலங்களில் '3G' எனும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
- Green leaves - கீரை வகைகள்
- Grains - முழு தானியங்கள்
- Green vegetables - பச்சைக் காய்கறிகள்
அந்த வகையில் '3G' உணவு வகைகளின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
Green vegetables - பச்சைக் காய்கறிகள்
இயற்கையாக கிடைக்கும் பச்சை தாவரங்களில் கால்சியம் அதிகமாக இருக்கும். இது தோல் சுருக்கம் என்பவற்றை கட்டுபடுத்துவதுடன், செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது.
இதனை ஓரளவு வெப்பநிலையில் சமைத்து உட்கொள்ளுவதால் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிவடையாமல் உடலுக்குள் சென்றுவிடும். இவ்வாறு காய்கறிகளை உட்கொள்வதால் தோல்கள் செழிப்பு பெறும்.
உதாரணமாக அவரை இன தாவரங்கள், வெள்ளரிக்காய், கேரட் மற்றும் தக்காளி போன்றவற்றை கூறலாம்.
Grains - முழு தானியங்கள்
பொதுவாக கர்ப்பமான காலத்தில் முழுதானியங்கள் எடுத்துக் கொள்வது சிறந்தாகும், ஏனெனின் பாலிஷ் போடாத தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும். இது போன்று ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்வதால் தோல் வலு பெறும்.
உதாரணமாக கோதுமை, அரிசி மற்றும் புழுங்கலரிசி என்வற்றை கூறலாம். தானியங்களால் கிடைக்கும் மாவினால் உணவு தயாரித்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை தந்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
Green leaves - கீரை வகைகள்
எமது வீடுகளில் இருக்கும் பச்சை தாவரங்களை உணவில் சேர்த்துக் கொள்வது கட்டாயமாகும். கர்ப்பக்காலங்களில் ஹார்மோன் மாற்றங்களினால் தலைமுடி உதிர்வு மற்றும் தோல் சுருக்கம், அதிகமான களைப்புக்கள் ஏற்படும். இதனை கட்டுபடுத்துவதற்கு கால்சியம், இரும்புச்சத்துகள் தேவை. இவையனைத்தும் கீரை வகைகளில் கிடைக்கிறது.
கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் அழிவடையும் வரை சமைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமான பெண்கள் தினமும் ஒரு வகை கீரை வகைகள் எடுத்துக் கொள்வது சிறந்தது.
உதாரணமாக வல்லாரை கீரை, பொன்னங்கன்னி கீரை மற்றும் சலாது போன்றவற்றைக் கூறலாம்.