கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுங்க... என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
கோடை காலத்தில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ராகி
சிறுதானியங்களில் ஒன்றாக இருக்கும் ராகியில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ள நிலையில், தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கின்றது.
மேலும் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும் உணர்வையும் கொடுக்கின்றது. கேழ்வரகு என்றும் கேப்பை என்றும் ராசி என்றும் அழைக்கப்படுகின்றது.
புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நிலையில், இதனை உப்புமா, கூழ் என செய்து சாப்பிடுவார்கள். அந்த வகையில் ரொட்டியாகவும் இதனை செய்து சாப்பிடலாம்.
இப்போது கோடைக்காலத்தில் தினமும் ராகி ரொட்டியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எடையை குறைக்க உதவும்
நார்ச்சத்து அதிகம் கொண்ட ராகியில் செரிமான மெதுவாக நடப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், இடையே தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பீர்கள்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் நபர்கள் காலையில் ராகி ரொட்டியை எடுத்துக் கொள்ளலாம். இவை நீண்ட நேரம் உடலை ஆற்றலுடன் வைக்கின்றது.

எலும்புகள் வலுபெறும்
ராகியில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கின்றது. மேலும் உடல் சோர்வு பிரச்சனையை நீக்குவதுடன், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகின்றது.
எலும்பு தொடர்பான பிரச்சனையை சந்திப்பவர்கள் தினமும் ராகி ரொட்டியை சாப்பிட்டால் நல்லதொரு மாற்றத்தினை பெறலாம்.
இரத்த சர்க்கரை
ராகியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு குறைவாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல் இருக்கும். நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால், ராகியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

செரிமானத்திற்கு சிறந்தது
ராகி ரொட்டி செரிமான பிரச்சனையை மேலும் எளிதாக்குகின்றது. வயிறு சரியில்லாத நேரத்தில் ராகியை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லதொரு மாற்றத்தினை பெறமுடியும்.
உடல் சூட்டை குறைக்கும்
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு சிறந்த தானியமாக ராகி இருக்கின்றது. ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடம்பை குளிர்ச்சியாக வைக்கின்றது.
மேலும் வெப்ப காலங்களில் ஏற்படும் நீரிழப்பு, பக்கவாதம், உடல் சோர்வையும் தடுக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |