Bigg Boss 10: நான் வெளியில போயிடலாம்னு நினைக்கிறேன்... கேமரா முன்பு கண்ணீர் சிந்திய முனியம்மா
Junior Boss Munniyamma Crying: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியர் பாஸாக இருந்து வரும் முனியம்மா கேமரா முன்பு கண்கலங்கி அழுதுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் அஸ்மிதா, அக்ஷிதா இருவரும் வெளியேற்றப்பட்டனர்.
சீசன் ஆரம்பித்து தற்போது 70 நாட்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் மிகவும் வித்தியாசமான டாஸ்க்கினை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக இல்லாத புதிய டாஸ்க்காக உள்ளது.
ஆம் பிக்பாஸில் ஒலித்துக் கொண்டிருந்த கம்பீர குரல் இல்லாமல் தற்போது பிக்பாஸ் வீடு சென்று கொண்டிருக்கின்றது. அந்த குரல் மட்டும் தான் இல்லை ஆனால் அதிகாரம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஜுனியர் பாஸாக வினோத்தை போட்டியாளர்கள் தேர்வு செய்து விளையாடி வந்தனர். ஆனால் வினோத்தை அந்த இருக்கையில் இருந்து தூக்குவதற்கு பல விஷயங்களை போட்டியாளர்கள் செய்தனர்.
ஒரு கட்டத்தில் வினோத்தும் இருக்கையை விட்டு இறக்கப்பட்டார். இந்நிலையில் முனியம்மா தற்போது ஜுனியர் பாஸாக இருந்து வருகின்றார். ஆனால் முனியம்மாவையும் குற்றப்படுத்தி தற்போது அழ வைத்துள்ளனர்.

போட்டியாளர்கள் நெருக்கடியினால் முனியம்மா எனக்கு அதிகமா தெரியவில்லை பிக்பாஸ்... பேசுறது மட்டும் தான் செயல்பாடு எதுவும் இருக்காது... நான் வெளியில போயிடலாம்னு நினைக்கிறேன்... என்று கேமரா முன்பு அழுதுள்ளார்.
முனியம்மாவின் இந்த முடிவு ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் மனதில் பட்டதை பேசி மற்றவர்களிடம் இயல்பாக விளையாடிய முனியம்மா தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆனால் வினோத் தான் பாஸாக இருக்கும் போது மிகவும் அருமையாக வீட்டை கொண்டு சென்ற நிலையில் அவரை சதிசெய்து நாற்காலியில் இருந்து இறக்கியுள்ளனர்.
தற்போது முனியம்மா எடுத்த இந்த முடிவிற்கு பிக்பாஸின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், அடுத்து இந்த நாற்காலியில் அமரப் போகும் போட்டியாளர்கள் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வழக்கம் போல் ஜேசன் மற்றும் வினோத் இருவரின் சண்டையும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |