11 ஆண்டுக்கு பின்பு லாரி ஓட்டுநருக்கு கிடைத்த தீபாவளி பரிசு... 25 லட்சம் பேர் ரசித்த காட்சி
Truck Driver Diwali Gift After 11 Years: லாரி ஓட்டுநர் ஒருவர் 11 ஆண்டுகளுக்கு கிடைத்த தீபாவளி பரிசை குழந்தையை போன்று ஆர்வத்துடன் அனைவருக்கும் காட்டிய காட்சி வைரலாகி வருகின்றது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாடைகள், பட்டாசு, பரிசு பொருட்கள் என மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இதில் குழந்தைகள் மிகவும் சந்தோஷமாகவே கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இங்கு நபர் ஒருவர் தனக்கு வந்த தீபாவளி பரிசு குறித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக நமக்கு ஒருவர் பரிசு கொடுத்தால் அதனை உடனே திறந்து உள்ளே என்ன இருக்கின்றது என்பதை காண்பதற்கு ஆர்வமாகவே இருப்போம். அந்த பழக்கம் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களாகிய நமக்கும் இருக்கின்றது.

சிறு குழந்தைகளுக்கு பரிசு வழங்குவது பெரும்பாலும், பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பெரியவர்களுக்கு இவ்வாறு சொந்தங்கள் பரிசுகளை வழங்கினாலும், நாம் வேலை செய்யும் பணியிடத்தில் இருந்து பரிசுகள் வந்தால் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
அவ்வாறு நபர் ஒருவர் தான் வெளிக்காட்டிய மகிழ்ச்சியினை காணொளியுடன் இன்னும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலாளி கொடுத்த பரிசு
குஜராத் மாநிலம் வாபியை சேர்ந்த சுரேஷ் மவுரியா என்ற லாரி ஓட்டுனர் நிறுவனம் ஒன்றில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரது முதலாளி, சுரேஷ் மவுரியாவிற்கு அளித்துள்ள தீபாவளி பரிசு அவருக்கு அதிகமான மகிழ்ச்சியினை அளித்துள்ளது.
குறித்த காட்சியில், ஒவ்வொரு பரிசையும் எடுத்து பிரிக்கும் போது குழந்தையைப் போன்ற உற்சாகத்துடன் காணப்படுகின்றார்.
இவர் தனது பணிக்காக இவ்வாறான பரிசுகளையும், அங்கீகாரத்தினையும் பெறுவது தனது வாழ்நாளில் இதுவே முதல்முறை என்று கூறியுள்ளார்.
சுரேஷிற்கு புதிய சட்டை, பேண்ட் மற்றும் கையில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பின்பு கிப்ட் இரண்டும் கொடுத்துள்ளார். அதனை பிரித்து பார்த்த போது அதில் மதிய உணவைக் கொண்டு செல்லும் வகையில் 4 டிபன் பாக்ஸ், குழம்பு அல்லது ஜுஸ் கொண்டு செல்வதற்கு ஒரு டப்பா என்று இருந்துள்ளது.
மற்றொரு பரிசை பிரித்து பார்த்த போது, அதில் பிளாஸ்க் இருந்துள்ளது. மேலும் காஜு கத்லி இனிப்பு இவற்றினை அவரது முதலாளி அளித்துள்ளார். குறித்த காணொளியினை இன்ஸ்டாவில் 25 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் அவதானித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |