மக்கள் முடிவு தவறு.. வெளியில் வந்த ஆதிரையின் ஆதங்கம்- கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
“மக்கள் என்னை தவறாக தெரிவு செய்து விட்டார்கள், வெளியில் வர அளவுக்கு என்ன செய்தேன்..” என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஆதிரை கூறியது இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை துண்டியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.

பார்வதி - கம்ருதீன் இருவரும் செய்யும் வேலைகளுக்கு மக்கள் அவர்கள் பக்கம் உள்ள கொந்தளிப்புக்களை வழங்கி வருகிறார்கள்.
மக்கள் தவறு! ஆதிரையின் ஆதங்கம்
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியேறிய ஆதிரையை ஜாக்குலின் பேட்டி எடுத்த காணொளி வெளியாகியுள்ளது.
அதில் பேசிய ஆதிரை, “ மக்கள் வாக்குக்களை அளிப்பதில் கவனம் வேண்டும். என்னை ஏன் வெளியில் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. டாப் 5 போட்டியாளர்களில் எப். ஜேவும் வருவார். அவருக்கும் எனக்கு சில மனக்கசப்புக்கள் இருந்தன, அது தான் நான் வெளியில் வர காரணமா என்று தெரியவில்லை.

மக்கள் இனியாவது சரியான போட்டியாளர்களை விளையாட விடுங்கள். கலையரசன் போன்று தகுதியில்லாத ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள். யார் என்ன கூறினாலும் என்னுடைய விளையாட்டை நான் விளையாடினேன். யாருக்காவும் நான் பிக்பாஸ் வீட்டிற்கு இல்லை, கடந்த 3 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முயற்சி செய்தேன்.
இன்னும் என்னுடைய திறமையை காட்டியிருக்கலாம். அதற்காக முயற்சி செய்யும் பொழுது மக்கள் செய்த தவறு காரணமாக வெளியில் வந்து விட்டேன்..” என பேசியிருக்கிறார்.

ஆதிரை இப்படி பேசியதை பார்த்த இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர். எப். ஜே- ஆதிரை செய்த அனைத்து விடயங்களும் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது தான் இவரின் இந்த எவிக்ஷனுக்கு காரணம் என்று ஆதிரைக்கு தெரியாமல் பேட்டிக் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |