இந்த ராசியினர் சண்டைக்கு நிற்பதில் கில்லாடிகளாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சண்டைக்கு காரணமாக இருப்பார்களாம்.

இவர்களின் முன்கோபம் மற்றும் அவசர குணம் இவர்கள் பிரச்சினைகளை ஆரம்க்க அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். அப்படி எப்போதும் மோதல்களுக்கு வித்திடும் போர் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சிறிய பிரச்சினைக்கு எரிமலை போல வெடிக்கும் மேஷ ராசியினர் இயல்பாகவே சட்டைக்கு செல்வதில் அதிக ஈர்வம் கொண்டவர்களாக இருபப்பார்கள்.
இவர்கள் ஒரு பிரச்சினைக்கு எளிமையாக தீர்வு கொடுக்க முடிந்தாலும் கூட மோதல்களை உருவாக்குதில் மட்டுமே திருப்தியடையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
போர் மற்றும் தைரியத்தின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுவதால், இயற்கையாகவே முறன்பாடுகளையும் சட்டைகளையும் ஊக்குவிக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
மிதுனம்

தகவல் தொடர்பு கிரகமான புதனால் ஆளப்படும் மிதுன ராசியினர் இரட்மை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு எப்போதும் அமைதியாக தோன்றினாலும் இவர்களின் மனதில் மோதல் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும்.
அவர்கள் பேசுவதையும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் விரும்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் செய்திகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால் சண்டைகள் தோன்ற முக்கிய காரமாக இருக்கும்.
இவர்கள் புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாதவர்கள் என்பதால், மோதலுக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.குறிப்பாக இந்த ராசியினர் பேசுவதற்கு முன் சிந்திக்க மாட்டார்கள்.
சிம்மம்

பிறப்பிலேயே சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பெருமைக்கும், ஆதிக்கம் செலுத்தும் தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பொறுமை என்பது கொஞ்சமும் இருக்காது.
அவர்கள் எப்போதும் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள், இவர்களுக்கு தலைமைத்துவம் கிடைக்காத போது மோதலுக்கு தயாராகும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் தங்களுக்கு மரியாதையும், கவனமும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அப்படி நிகழாத போது எளிதில் கோபப்படுவார்கள் மற்றும் சூழலை ஆக்ரோஷமானதாக மாற்றவும் தயங்க மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |