83 குழந்தைகளா? முதல் தடவையாக கர்ப்பமாக இருக்கும் AI அமைச்சர்- அறிவியல் அதிசயம்
அல்பேனியாவின் AI பெண் அமைச்சர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முதல் AI அமைச்சர்
அல்பேனிய ஏஐ அமைச்சரான Diella அவர்களுடைய பெயருக்கு பின்னால் மிகப் பெரிய காரணம் மறைந்திருக்கிறது.
அல்பேனிய மொழியில் ‘சூரியன்’ என்று அர்த்தமாகும். ஊழலற்ற, முழுமையான வெளிப்படத்தன்மையுடன் கூடிய கொள்முதல் துறையை எடுத்து நடத்துவதே இந்த பெயருக்கு பின்னால் இருக்கும் மறைமுக கருத்தாகும்.
இந்த ஏஐ அமைச்சர் பார்ப்பதற்கு அல்பேனிய பாரம்பரிய உடையணிந்து சாதாரண பெண் போன்று காட்சியளிப்பார். இதற்கு முன்னர் ஏஐ அமைச்சர், ஈ-அல்பேனியா தளத்தில் மெய்நிகர் உதவியாளராக அறிமுகப்பட்டு, அதன் பின்னர் பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் அரசு ஆவணங்களை பெறுவதில் உதவி செய்தார்.

அவர்களுக்கும் அவரது குழந்தைகளுக்கும் கண்டிப்பாக அரசியலிலும், தொழில்நுட்ப உலகிலும் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI தொழில் நுட்பம்
AI தொழில் நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. ஏஐ கேர்ள் பிரண்ட், ஏஐ பாய் பிரண்ட் என AI தொழில்நுட்பத்தில் இல்லாத விடயங்களே இல்லை.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் அல்பேனியா நாட்டில் முதல் AI அமைச்சர் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில், கடந்த செப்டம்பர் மாதத்தில் AI அமைச்சர் நியமிக்கப்பட்டார்.
இந்த AI அமைச்சருக்கு‘டயல்லா’ என பெயர் வைக்கப்பட்டது. வழக்கம் போன்று இந்த அமைச்சர் பொது கொள்முதல் துறையில் நியமனம் கொடுக்கப்பட்டது.

முறைகேடு நடக்காமல் இருக்க வேண்டும், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் ஆகிய இரண்டு நோக்கங்களுக்காகவே இந்த AI அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
83 குழந்தைகளுக்கு தாயான டயல்லா
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அல்பேனிய பிரதமர் எடி ராமா ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். அதில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI அமைச்சர் தற்போது 83 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது அரசாங்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சோசலிஸ்ட் கட்சி எம்.பிக்களுக்கும் உதவும் வகையில், ஏஐ உதவியாளர்கள் (குழந்தைகள்) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியொரு முயற்சியினால் உள்ளே வரும் AI உதவியாளர்கள், பார்லிமெண்ட் நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்கள்.

அதே போன்று AI உதவியாளர்கள், எம்.பிக்கள் அவையில் இல்லாத சந்தர்ப்பம் வந்தாலும், அவர் தவற விடும் விடயங்களை தெரிந்து கொண்டு, உரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவார்.
தேவைப்பட்டால் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு அவையில் பதில் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது என பிரதமர் கூறியுள்ளார். இவற்றையெல்லாம் டயல்லா என்கிற AI தொழில் நுட்பம் உள்ளே வருவதால் அமைச்சர் இவர்களை டயல்லாவின் குழந்தைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |