இவங்க அலப்பறை தாங்க முடியல.. கம்ப்ளைன்ட் செய்த திவாகருக்கு தலைவர் கொடுத்த தரமான ரிப்ளை
“வீம்புக்கு இவர் இப்படி பண்ணுறாரு...” என இந்த வார பிக்பாஸ் தலைவரான பிரவீனிடம் திவாகர் புகார் கொடுக்கிறார்.
பிக்பாஸ் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியது.
இதிலிருந்து தற்போது வரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் வீட்டின் தலைவராக நடிகர் பிரவீன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
வழக்கத்தை விட இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பல அதிரடிகளை நடந்து கொண்டிருக்கின்றன.

ஆம், வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களின் ஆடை மற்றும் ஆபரணங்களை பறித்துக் கொண்டு, பிக்பாஸிலிருந்து வந்த உடையை அணிய வைத்துள்ளார்.
திவாகர்- கானா வினோத் அலப்பறை
இந்த நிலையில், வைல்ட் கார்ட் போட்டியாளர்களின் விவரங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. எப்போது அவர்கள் உள்ளே செல்வார்கள் என காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில், ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த கானா வினோத்- திவாகர் இருவரின் அலப்பறை வர வர தாங்க முடிவதில்லை. திவாகர் அவருடைய நடிப்பு திறமையை காட்ட முயற்சிக்கும் பொழுது கானா வினோத் சத்தமாக பாடல் பாடி அவரை நடிக்க விடாமல் செய்கிறார்.

இதனை சக போட்டியாளர்கள் பார்த்து நகைத்தாலும் பெரிதாக யாரும் உள்ளே வரவில்லை. இறுதியாக இந்த வார தலைவரான பிரவீனிடம் சென்று புகார் கொடுக்கிறார். அதற்கு அவர், “பாடுவது அவருடைய உரிமை..” என்கிறார். திவாகருக்கு என்ன செய்வது என தெரியவில்லை.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |