நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் இந்த உணவுகளை இனி தொட்டுக் கூட பார்க்காதீங்க...
பொதுவாகவே மனித உடலுக்கு சக்தி என்பது மிக மிக முக்கியமாகும். எமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும்.
உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதற்கு பல உணவுகளின் கவனம் செலுத்த வேண்டும். அப்படி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளும் மோசமாக்கும் உணவுககளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும் உணவுகள்
நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் பாதிப்பது சக்கரையால் செய்யப்பட்ட உணவுகள் தான் அதனால் சக்கரையால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள், சிப்ஸ், பேக்கிங் ஸ்நாக்ஸ் போன்ற உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தையும் பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்கிறது.
கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவை என்றாலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்றால் ஒமேகா 6 கொண்ட பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
பாதாமில் இருக்கும் வைட்டமின் ஈ, மெக்னீசியம், துத்தநாகம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மசாலாப் பொருட்களில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மஞ்சளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |