வெறும் 10 நிமிடம்! உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கலாம்
இன்றைய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களே பாதுகாப்பாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் தற்போது ஆட்டிப்படைக்கும் கொரோனாவிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் அதிகமாக இருந்தாலே அதிலிருந்து தப்பித்து விடலாம்.
தற்போது அநேக மக்கள் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதற்கு பல உணவுகளின் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறான நபர்களுக்கு வெறும் 10 நிமிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பானத்தினை தயார் செய்வதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 3 டம்ளர்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
துருவிய இஞ்சி- கால் டீஸ்பூன்
பட்டை- 2
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் பாலை ஊற்றி காய்ச்சவும், பால் கொதித்ததும், மஞ்சள் தூள், மிளகு தூள், துருவிய இஞ்சி மற்றும் பட்டை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பால் நன்றாக காய்ந்த பின்னர், வடிகட்டி அதனுடன் வெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
குழந்தைகளுக்கும் இதை கொடுக்கலாம், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரித்துவிடும்.
மஞ்சளின் பயன்கள்
மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள ஜிஞ்சிபெரின், ஒலியரோசின் எனும் வேதிய பொருட்கள் பித்தம், கபம், தலவலி, தோல் நேய்கள், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
மஞ்சளில் புரதச்சத்து, கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும், வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்கவும், இருமலை போக்கவும் உதவுகின்றது.
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
மிளகின் பயன்கள்
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், அதனை பயன்படுத்தும் நேரத்தில் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று வந்தால் அப்பழக்கத்திலிருந்து விடுபடலாம்.
மிளகை தினந்தோறும் உண்பதால் ஆண்களின் மலட்டு தன்மையை போக்குவதோடு, வாயு கோளாறுகளையும் நீக்குகின்றது.
புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக இருக்கிறது.
தினந்தோறும் சில மிளகுகளை மென்று சாப்பிட்டு வருவதால் தலையில் பொடுகு தொல்லை நீங்கும்.
ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து கொள்ள தினமும் சில மிளகுகளை மென்று தின்பது சிறந்தது.
இஞ்சியின் பயன்கள்
ஜீரண கோளாறு, குமட்டலுக்கு தீர்வு தருவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கின்றது.
மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு
மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தரும் பொருள் ஆகும்
புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது