சத்துமிக்க பேபி கோர்ன் சூப் இப்படித்தான் செய்ய வேண்டும்...
பேபிகோர்னில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. அதுமாத்திரமின்றி இதில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.
இனி பேபிகோர்ன் சூப் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகக் காணப்படுகிறது.
தேவையான பொருட்கள்
பேபி கோர்ன் - 6
காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
வெள்ளைப் பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
சோள மா - 2 மேசைக்கரண்டி
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 5 கப்
உப்பு - தேவையான அளவு
image - easy cooking with molly
செய்முறை
முதலில் பேபி கோர்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லித்தழை என்பவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்க வேண்டும்.
வதக்கியவற்றில் காளான், குடைமிளகாய், பேபி கோர்ன், மிளகுத்தூள், உப்பு என்பவற்றைப் போட்டு மீண்டும் வதக்கவும்.
பின்பு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலக்கிவிட்டு நன்றாக கொதித்ததும் தீயை குறைத்துவிட வேண்டும்.
அதன் பின்பு சோளமாவை 1 க்ளாஸ் தண்ணீரியில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். அதை பேபி கோர்ன் கலவையில் ஊற்றி வேண்டும்.
ஊற்றி சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும்வரை கிளற வேண்டும். இறுதியாக அதில் முட்டைக்கோஸைப் போட்டு கிளறி இறக்க வேண்டும்.
image - taste